search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் ஆத்திரம்"

    அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதை காவல் நிலையம் கட்டுபடுத்த தவறிவிட்டது என கூறி காவல் நிலையத்தை சூறையாடிய 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #Mobattack
    பாட்னா:

    பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள திஹாரா ஜும்ஹார் கிராம பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வந்துள்ளது. விபத்து ஏற்படுவதை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் அருகில் உள்ள பாருன் நகர் காவல் நிலையத்தில் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்நிலையில், திஹாரா ஜும்ஹார் கிராமத்தை சேர்ந்த சத்ய பிரகாஷ் மீது இன்று மணல் லாரி மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், சத்ய பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் விபத்து நிகழ்ந்த சில நிமிடங்களில் பாருன் நகர் காவல் நிலையத்தை சூறையாடினர்.

    இது குறித்து விளக்கம் அளித்த அவுரங்காபாத் போலீஸ் எஸ்.பி, போக்குவரத்தை சரிசெய்து விபத்து ஏற்படுவதை கட்டுப்படுத்த பாருன் நகர் காவல் நிலையம் எந்த முன்னெச்சரிக்கை எடுக்கவில்லை என திஹாரா ஜும்ஹார் கிராம மக்கள் கூட்டமாக பாருன் நகர் காவல் நிலையத்தை கற்கள் மற்றும் ஆயுதங்களை கொண்டு இன்று சூறையாடியுள்ளனர். மேலும், காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த மணல் லாரிகளுக்கும் தீ வைத்துள்ளனர். 

    வன்முறையில் ஈடுபட்ட கிராம மக்களை கட்டுபடுத்த சிறிய எண்ணிக்கையிலான போலீஸ் படை பயன்படுத்தப்பட்டது. காவல் நிலையத்தை சூறையாடிய 25 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார். #Mobattack
    ×